கடந்த மே மாதம் 10-ம் தேதி, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூரை’ நடத்தி முடித்தது.
‘இந்திய ராணுவத்தை நாங்கள் தான் பெருமளவில் தாக்கினோம்’ என்று இதுவரை கூறிவந்த பாகிஸ்தான், நேற்று ஒரு உண்மையை உடைத்து பேசி பேசியுள்ளது.
நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “மே 10-ம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனீர் எனக்கு போன் செய்து நமது விமானப் படை தளங்களையும், பிற பகுதிகளையும் இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்கியுள்ளன என்று கூறினார்.

நமது விமானப்படை நமது நாட்டிலேயே தயாரித்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நமது நாட்டை காப்பற்றியது. அவர்கள் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கூட பயன்படுத்தினார்கள்.
நான் நமாஸ் முடித்தப்பிறகு, நீச்சல் குளத்திற்கு சென்றேன். அப்போது என்னுடன் என்னுடைய தனிப்பட்ட போன் மட்டும் இருந்தது. போன் இரண்டாவது முறையாக அடித்தது. அது அசிம் முனீர் தான். அப்போது அவர் பாகிஸ்தான் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்துவிட்டது” என்று கூறினார்.
இதுவரை இந்தியா தங்களது விமானப்படை தளங்களை தாக்கவில்லை என்று கூறி வந்தது பாகிஸ்தான். ஆனால், உண்மையை இப்போது பாகிஸ்தான் பிரதமரே உடைத்திருக்கிறார்.