காத்மண்டு,
இந்தியா, நேபாளம் இடையே இமயமலை உள்ளது. இந்த மலையில் உள்ள எவரஸ் உள்ளிட்ட சிகரங்களில் ஏற உலகம் முழுவதும் இருந்து மலையேற்ற வீரர், வீராங்கனைகள், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் மேற்குவங்காளத்தை சேர்ந்த சபரதா கோஷ் (வயது 45) நேபாளத்தில் இருந்து நேற்று இமயமலையின் எவரஸ் சிகரம் நோக்கி மலையேற தொடங்கியுள்ளார். அவருக்கு வழிகாட்டியாக சம்பல் தமுக் என்பவர் சென்றுள்ளார். சபரதா கோஷுடன் மேலும் சில மலையேற்ற வீரர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் சிகரத்தை அடைந்தபின் அங்கிருந்து அனைவரும் முகாம் திரும்பியுள்ளனர். வரும் வழியில் சபரதா கோஷுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது வழிகாட்டி இரவு முகாமிற்கு வந்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, உயிரிழந்த சபரதா கோஷ் உடலை தேடும் பணியில் மலையேற்ற வீரர்கள் இன்று ஈடுபட்டு வருகின்றனர். அவரது உடல் மீட்கப்பட்டு இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.