காஞ்சிபுரம்: பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக போற்றப்படுகிறது உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நடப்பாண்டு, வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வரும் 20-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. சுமார் 24 ஏக்கர் […]
