புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 112 ரன்களுடனும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் 200 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 93 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்திலிருந்தே அசத்தி வரும் சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஜோடி இதுவரை 839 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் குவித்துள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த தொடக்க ஜோடி என்ற மாபெரும் சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.
அந்த பட்டியல்:
1.சுப்மன் கில் & சாய் சுதர்சன் – 839 ரன்கள்
2. ஷிகர் தவான் & பிரித்வி ஷா – 744 ரன்கள்
3. மயங்க் அகர்வால் & கே.எல்.ராகுல் – 671 ரன்கள்
4. மயங்க் அகர்வால் & கே.எல்.ராகுல் – 602 ரன்கள்
5. விராட் கோலி & படிக்கல் – 601 ரன்கள்