சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் கல் சரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது. இன்று காலை குவாரி பள்ளத்தில் கல் சரிந்ததில் 7 பேர் சிக்கி கொண்டனர்.
இவர்களில் 3 பேர் புதைந்தனர். மேலும் 4 பேர் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் 2 பேர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.