பாகிஸ்தானின் உயரிய விருது ராகுல் காந்திக்கு வழங்கப்படலாம்: ஆபரேஷன் சிந்​தூர் விவகாரத்தில் பாஜக விமர்சனம்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறும்​போது, “ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக பாகிஸ்​தானுக்கு அதி​காரப்​பூர்​வ​மாக தகவல் அளித்​த​தாக மத்​திய அரசு ஒப்​புக் கொள்​கிறது. இந்த தாக்​குதலில் இந்​திய விமானப் படை எத்​தனை போர் விமானங்​களை இழந்​தது’’ என்று கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:
ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கையின்போது இந்​திய விமானப் படை எத்​தனை போர் விமானங்​களை இழந்​தது என்று ராகுல் காந்தி தொடர்ச்​சி​யாக கேள்வி எழுப்பி வரு​கிறார்.

பாகிஸ்​தான் விமானப் படை எத்​தனை போர் விமானங்​களை இழந்​தது? எத்​தனை பாகிஸ்​தான் விமான படைத் தளங்​கள் அழிக்​கப்​பட்டன என்று அவர் கேள்வி எழுப்​ப​வில்​லை. பாகிஸ்​தானுக்கு ஆதர​வாக செயல்​படும் ராகுல் காந்​திக்கு அந்த நாட்​டின் உயரிய விரு​தான ‘‘நிஷான் -இ- பாகிஸ்​தான்’’ வழங்​கப்​படலாம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இன்​றைய கால மிர் ஜாபர் ராகுல்: இங்​கிலாந்​தின் கிழக்​கிந்​திய கம்​பெனி இந்​தி​யா​வில் கால் பதித்த காலத்​தில் ஆட்​சி​யை​யும் கைப்​பற்ற திட்​ட​மிட்​டது. இதன்​படி கடந்த 1757-ம் ஆண்​டில் கிழக்​கிந்​திய கம்​பெனிக்​கும் வங்​கதேச நவாப் சிராச் உத் தவ்​லா​வுக்​கும் இடையே பிளாசி போர் நடை​பெற்​றது.

அப்​போது வங்​கதேச நவாப் சிராச் உத்​தவ்​லா​வின் படைத் தளபதி மிர் ஜாபர், கிழக்​கிந்​திய கம்​பெனி​யுடன் ரகசி​ய​மாக கைகோத்​தார். மிர் ஜாபரின் சதி​யால் நவாப் சிராச் உத் தவ்லா போரில் தோல்வி அடைந்​தார். இந்​திய வரலாற்​றில் துரோகத்​தின் சின்​ன​மாக மிர் ஜாபர் கருதப்​படு​கிறார்.

பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் நேற்று ஒரு கார்ட்​டூன் புகைப்​படத்தை வெளி​யிட்​டார். அதோடு அவர் வெளி​யிட்ட பதி​வில், “இன்​றைய நவீன கால மிர் ஜாபர்- ராகுல் காந்​தி’’ என்று விமர்​சித்து உள்​ளார்.

இதுகுறித்து காங்​கிரஸ் மூத்த தலை​வர் பவன் கெரா கூறும்போது, ‘‘முன்​னாள் பிரதமர் மொராஜி தேசாய் (1977-79), அன்​றைய பாகிஸ்​தான் அதிபர் ஜியா உல் ஹக் உடன் தொலைபேசி​யில் பேசி​னார். இந்​தி​யா​வின் ரா உளவாளி​கள் அளித்த தகவல்​களை மேற்​கோள் காட்டி பாகிஸ்​தான் அதிபரிடம் அவர் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதன்​பிறகு பாகிஸ்​தானில் செயல்​பட்ட இந்​தி​யா​வின் ரா உளவாளி​கள் அடுத்​தடுத்து மர்​ம​மான முறை​யில் கொல்​லப்​பட்​டனர். இதற்கு மொராஜி தேசா​யின் தொலைபேசி உரை​யாடலே முக்​கிய காரணம். நவீன​கால மொராஜி தேசாய்​ ஆக அமைச்​சர்​ ஜெய்​சங்​கர்​ செயல்​படு​கிறார்​’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.