சென்னை: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் தற்போது இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடவில்லை என்றும், வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்தப்படாது என்று மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். […]
