Google AI Shopping Features: கூகிள் அதன் கூகிள் I/O 2025 மாநாட்டில் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான பல புதிய AI (செயற்கை நுண்ணறிவு) அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை எளிதாகவும் சுவாரசியமாகவும் மாற்றும். இப்போது AI பயன்முறை கூகிள் தேடலில் கிடைக்கும். அங்கு பயனர்கள் அனைத்து பிராடெக்டுகளின் படங்களையும் AI இலிருந்து பெறப்பட்ட தகவல்களையும் பார்க்க முடியும். இவை அனைத்தும் பிராடெக்ட் தொடர்பான தரவைப் பயன்படுத்தி செயல்படும்.
இதுவரை, ஒரு பொருளின் விலை அதிகமாக இருந்தால், மக்கள் அதை வாங்க சேலுக்காக காத்திருப்பது வழக்கம். தள்ளுபடி சலுகை ஏதாவது வந்துள்ளதா இல்லையா என்பதை மக்கள் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது விலை குறைந்தவுடன் கூகிள் நிறுவனமே பயனர்களுக்குத் தெரிவிக்கும் என்பதால், மக்கள் இந்தத் தொந்தரவிலிருந்து விடுபடுவார்கள். இது பயனர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும். இது எப்படி நடக்கிறது என இங்கே காண்ணலாம்.
Advanced Price Tracking Feature: விலை கண்காணிப்பு அம்சம்
ஷாப்பிங்கை எளிதாக்கும் AI அம்சங்களில் மிக முக்கியமானது மேம்பட்ட விலை கண்காணிப்பு அம்சமாகும். இது வரும் மாதங்களில் சேர்க்கப்படும். இப்போது பயனர்கள் அனைத்து கூகுள் பிராடெக்ட் லிஸ்டிங்கிலும் விலையைக் கண்காணி என்பதை டேப் செய்யலாம். பயனர்கள் ஒரு பிராடெக்டை தேர்ந்தெடுத்து, நிறம் மற்றும் அளவு அடிப்படையில் அதை ஃபில்டர் செய்யலாம். மேலும் அந்தப் பொருளுக்கு நீங்கள் செலவிட விரும்பும் தொகையைத் தீர்மானிக்கலாம்.
விலை குறைந்தவுடன் கூகிள் உங்களுக்குத் தெரிவிக்கும்.
கூகிள் விலையைக் கண்காணித்து, உங்கள் இலக்கு விலையுடன் விலை பொருந்தும்போது உங்களுக்கு அறிவிப்பை அனுப்பும். இதற்குப் பிறகு, “பை ஃபார் மி” விருப்பத்தை டெப் செய்து பொருளை வாங்கலாம். ‘பை’ பொத்தானைக் கிளிக் செய்த பிறகு, கூகிள் அந்த பொருளை வணிகரின் வலைத்தளத்தில் உள்ள ஷாப்பிங் கார்டில் சேர்த்து, வாங்கும் செயல்முறையை பாதுகாப்பானதாக்க உங்கள் Google Pay விவரங்களைப் பயன்படுத்தும். இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்காவில் கிடைக்கும் என்று கூகிள் கூறுகிறது.
ஆடைகளை ட்ரை செய்யும் அம்சம்
இந்தப் புதிய அம்சங்களில் ஒன்று விர்ச்சுவல் டிரை-ஆன் அம்சமாகும். இது பயனர்கள் ஆடைகளை வர்சுவலாக அணிந்துபார்க்க அனுமதிக்கும். இப்போது மாடலில் உள்ள ஆடைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, உங்கள் முழு புகைப்படத்தையும் பதிவேற்றி, அந்த ஆடைகள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம். இந்த அம்சம் தற்போது அமெரிக்காவில் உள்ள தேடல் ஆய்வகங்களில் கிடைக்கும். இதில் பேன்ட், சட்டை, ஆடைகள் மற்றும் ஸ்கர்டுகள் ஆகியவை அடங்கும். இந்த AI மாதிரி மனித உடல் மற்றும் ஆடைகளின் அமைப்பை புரிந்துகொண்டு பல்வேறு ஆடை வகைகள் உடலில் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதையும் புரிந்துகொள்ளும் என கூகிள் கூறுகிறது.