KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

Qlமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார் முன்னணி நடிகர் தனுஷ்.

ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன் (Kalam: Missile Man of India) எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த திரைப்படம் குழந்தைப் பருவம் முதல் அப்துல் கலாமின் பயணத்தைக் கூறும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இயக்குநர் ஓம் ராவத், “ராமேஸ்வரம் முதல் ராஷ்ட்ரபதிபவன் வரை. ஒரு லெஜண்டின் பயணம் தொடங்குகிறது.

இந்தியாவின் ஏவுகணை நாயகன் வெள்ளித்திரைக்கு வருகிறார்.

பெரிதாக கனவு காணுங்கள்… உயர்ந்த இடத்துக்கு செல்லுங்கள்…” எனப் பகிர்ந்துள்ளார்.

இந்த திரைப்படம் அபிஷேக் அகர்வாலின், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் முன்னதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைத் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் சாதாரண பின்னணியில் பிறந்து கல்வியின் மூலம் நாட்டின் உயர்ந்த நிலைக்குச் சென்றவர். இந்தியாவின் முதல் அணு ஆயுத தயாரிப்பில் முக்கிய பங்காற்றியதுடன், நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்துள்ளார்.

அப்துல் கலாம்

அப்துல் கலாமாக நடிப்பது தனுஷின் சினிமா வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், “நான் நமது இன்ஸ்பிரேஷனலான தாராள மனப்பான்மைகொண்ட தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயாவாக நடிப்பதில் மிகுந்த பாக்கியவானாகவும் பணிவாகவும் உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் இட்லி கடை மற்றும் குபேரன் திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு ஐசரி கனேஷ் இயக்கத்தில் மாரி செல்வராஜுடன் மீண்டும் இணையும் திரைப்படம் அறிவிக்கப்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.