WhatsApp Tips : உங்கள் வாட்ஸ்அப் சாட்களை தவறுதலாக நீக்கியிருந்தீர்கள், அதை எளிதான வழிகளில் மீட்டெடுக்கும் ஆப்சன்கள் உள்ளன. வாட்ஸ்அப் ஒரு மெசேஜ் செயலியாக இருந்த நிலையில், அது இப்போது பணம் அனுப்பும் வங்கிச் சேவைகளைக் கூட எளிதாக செய்யும் தளமாக மாறிவிட்டது. அது உணர்ச்சிகளையும், அழகான தருணங்களையும் சேமிக்கும் டிஜிட்டல் டைரியாகவும் செயலியாக உள்ளது. அப்படி ஒரு முக்கியமான வாட்ஸ்அப் செயலியில் உங்களின் தனிப்பட்ட சாட்கள் தற்செயலாக நீக்கப்பட்டால், நீங்கள் வருத்தப்படுவீர்கள். இருப்பினும், இந்த நீக்கப்பட்ட சாட்களை சில எளிய வழிகளில் மீண்டும் மீட்டெடுக்க முடியும். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…
முதல்வழி – வாட்ஸ்அப் அமைப்புகளில் backup file இயக்கியிருந்தால், உங்கள் சாட்கள் அவ்வப்போது கூகிள் டிரைவ் (ஆண்ட்ராய்டு) அல்லது ஐக்ளவுட் (iOS)-ல் சேமிக்கப்படும். அதில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
1. உங்கள் தொலைபேசியில் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து அதை மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்
2. செயலியைத் திறந்து உங்கள் எண்ணைக் கொண்டு உள்நுழையவும்.
3. வாட்ஸ்அப் இப்போது backup file-ஐ மீட்டெடுக்கச் சொல்லும். இங்கே ‘Restore’ என்பதைத் தட்டவும்.
4. backup file -ல் இருந்து எடுத்தவுடன் உங்கள் பழைய சாட்கள் வாட்ஸ்அப்பில் திரும்ப வரும்.
இரண்டாவது வழி – local backup- லிருந்து சாட்களை ரீ ஸ்டோர் செய்யவும்
வாட்ஸ்அப் உள்ளூர் காப்புப்பிரதி கோப்புகளை தொலைபேசியின் சேமிப்பகத்தில் சேமிப்பதால் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மற்றொரு ஆப்சன் உள்ளது. கீழே உள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. உங்கள் தொலைபேசியின் பைல் மேனேஜருக்கு சென்று /WhatsApp/Databases/ folder-ஐ திறக்கவும்.
2. சமீபத்திய local backup-ல் தேடவும். -`msgstore-YYYY-MM-DD.1.db.crypt14` தேடுங்கள்
3. அந்தக் கோப்பை `msgstore.db.crypt14` என மறுபெயரிடுங்கள்.
4. இப்போது வாட்ஸ்அப்பை இன்ஸ்டாலை நீக்கி மீண்டும் நிறுவவும்.
5. நிறுவலின் போது ‘ரீ ஸ்டோர்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
கவனிக்க வேண்டிய விஷயம் கிளவுட் காப்புப்பிரதி கிடைக்காதபோதும், நீங்கள் லோக்கல் பேக்கப் பைலை சேதப்படுத்தாதபோதும் மட்டுமே இந்த முறை செயல்படும்.
மூன்றாவது வழி : மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் வாட்ஸ்அப் சாட் எடுக்கவும்
உங்களிடம் பேக்கப் பைல் இல்லையென்றால், கடைசி விருப்பமாக Dr.Fone, iMyFone போன்ற மூன்றாம் தரப்பு மீட்பு கருவிகளை முயற்சி செய்யலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.
1. உங்கள் கணினியில் இந்த மீட்பு கருவியை நிறுவவும்.
2. USB -ஐப் பயன்படுத்தி தொலைபேசியை கணினியுடன் இணைக்கவும்.
3. Android தொலைபேசி பயனர்கள் USB பிழைத்திருத்தத்தை இயக்க வேண்டியிருக்கலாம் (டெவலப்பர் விருப்பங்கள் அமைப்புகளிலிருந்து).
4. கருவி உங்கள் தொலைபேசியை ஸ்கேன் செய்து நீக்கப்பட்ட தரவை மீட்டெடுக்க முயற்சிக்கும். அது வெற்றியடைந்தால், சாட்களை மீட்டெடுக்க முடியும்.
நினைவில் கொள்ளுங்கள், இந்த கருவிகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.