தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

புதுடெல்லி: தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான போரில் இந்​தி​யா​வுக்கு ஜப்​பான், ஐக்​கிய அரபு அமீரகம் முழுஆதரவு அளித்​துள்​ளன. தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து உலக நாடு​களிடம் ஆதா​ரத்​துடன் எடுத்​துரைக்க சசி தரூர், ரவிசங்​கர் பிர​சாத், கனி​மொழி உள்​ளிட்​டோர் தலை​மை​யில் 7 எம்​பிக்​கள் குழு அமைக்​கப்​பட்டு உள்​ளன.

ஐக்​கிய ஜனதா தள எம்பி சஞ்​சய் ஜா தலை​மையி​லான எம்​பிக்​கள் குழு ஜப்​பான் தலைநகர் டோக்​கி​யா​வில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்​சர் டகேஷி இவா​யாவை நேற்று சந்​தித்​துப் பேசி​யது. இதுகுறித்து சஞ்​சய் ஜா கூறும்​போது, “தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான போரில் இந்​தி​யா​வுக்கு ஜப்​பான் முழு ஆதரவு அளித்து உள்​ளது. இந்​தி​யா​வுக்கு துணை நிற்க ஜப்​பான் உறுதி அளித்​திருக்​கிறது” என்று தெரி​வித்​தார்.

சஞ்​சய் ஜா தலை​மையி​லான குழு இந்​தோ​னேசி​யா, மலேசி​யா, கொரி​யா, சிங்​கப்​பூர் நாடு​களுக்கு அடுத்​தடுத்து பயணம் மேற்​கொள்​கிறது. சிவசேனா (ஷிண்டே அணி) எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலை​மையி​லான எம்​பிக்​கள் குழு ஐக்​கிய அரபு அமீரகம் சென்​றுள்​ளது. அந்த குழு​வினர் அபு​தாபி​யில் நேற்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் நயகான் முபாரக், அமீரக ஊடக பிரிவு தலை​வர் ஜமால் முகமது ஒபாத் அல் கபி ஆகியோரை சந்​தித்து பேசினர்.

இதுகுறித்து ஐக்​கிய அரபு அமீரக அதி​காரி​கள் கூறும்​போது, “அப்​பாவி மக்​களை கொல்ல முஸ்​லிம் மதம் அனு​ம​திக்​க​வில்​லை. தீவிர​வாதத்​துக்கு எதி​ரான போரில் இந்​தி​யா​வுக்கு நாங்​கள் ஆதரவு அளிக்​கிறோம்” என்று தெரி​வித்​தனர். ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்பி கூறும்​போது, “மும்பை தீவிர​வாத தாக்​குதல், பதான்​கோட் தாக்​குதல், புல்​வாமா தாக்​குதல் என எல்லை தாண்​டிய தீவிர​வாதம் தொடர்​கதை​யாக நீடித்து வரு​கிறது. பாகிஸ்​தான் அரசு தீவிர​வா​தி​களுக்கு அடைக்​கலம் அளிக்​கிறது. எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​குவிக்​கு​கிறது. தீவிர​வாதத்​துக்கு எதி​ரான இந்​தி​யா​வின் போருக்கு ஐக்​கிய அரபு அமீரகம் முழு ஆதரவு அளித்​துள்​ளது” என்று தெரி​வித்​தார்.

ஸ்ரீகாந்த் ஷிண்டே தலை​மையி​லான குழு லைபீரி​யா, காங்​கோ, சியேரா லியோனி நாடு​களில் அடுத்​தடுத்து பயணம் மேற்​கொள்​கிறது. ஜப்​பான் மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இந்​திய எம்​பிக்​கள் குழு​வினர் அந்த நாடு​களின் தலை​வர்​களை சந்​தித்​துப் பேசிய புகைப்​படங்​களை இந்​திய தூதரகங்​கள் வெளி​யிட்டு உள்​ளன.” என்று தெரி​வித்​துள்​ளார். திமுக எம்பி கனி​மொழி தலை​மையி​லான எம்​பிக்​கள் குழு டெல்​லி​யில் இருந்து நேற்று தனது பயணத்தை தொடங்​கியது. இந்த குழுஸ்பெ​யின், கிரீஸ், லாட்​வி​யா, ரஷ்யா ஆகிய நாடு​களில் சுற்​றுப் பயணம் மேற்​கொள்ள உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.