IPL 2025 Latest News : ஐபிஎல் 2025 தொடரில் இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் மிக மோசமாக விளையாடியுள்ளனர். இத்தனைக்கும் 62 கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்து அவர்களை மூன்று அணிகள் வாங்கியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளையும் மோசமான பேட்டிங்கால் ஏமாற்றிய மூன்று பிளேயர்களை இங்கே பார்க்கலாம்.
1. ரிஷப் பந்த்
ஐபிஎல் 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியின் கேப்டனாக இருப்பவர் ரிஷப் பந்த். நடப்பு சீசனில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் மோசமான தோல்விகளை சந்தித்தற்கு ரிஷப் பந்தின் பேட்டிங்கும் முக்கிய காரணம். அவர், ஐபிஎல் 2025ல் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் வெறும் 13.73 என்ற மோசமான சராசரியுடன் 151 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஐபிஎல் 2025ல் ரிஷப் பந்தின் அதிகபட்ச ஸ்கோர் 63 ரன்கள் மட்டுமே. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி ரிஷப் பந்தை 27 கோடி ரூபாய்க்கு மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது. அந்த விலைக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்படவில்லை ரிஷப் பந்த்.
2. வெங்கடேஷ் ஐயர்
கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர் வெங்கடேஷ் ஐயர். ஐபிஎல் 2025 சீசனில் 11 போட்டிகளில் விளையாடினார். அதில் அவர் 20.29 என்ற மோசமான சராசரியுடன் 142 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐபிஎல் 2025ல் வெங்கடேஷ் ஐயர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 60 ரன்கள். இவரின் மோசமான பேட்டிங் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி IPL 2025 தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது.
3. இஷான் கிஷன்
ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்கியதும், சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே அதிரடி ஆட்டம் மூலம் சதமடித்தவர் இஷான் கிஷன். இதனால் இந்த சீசனில் மிகப்பெரிய ரன்களை அவர் அடிக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவுட்டாப் பார்ம் ஆனார். இஷான் கிஷன், ஐபிஎல் 2025ல் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, அதில் 25.67 சராசரியில் 231 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இஷான் கிஷனின் மோசமான பேட்டிங் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி முக்கிய போட்டிகளில் தோல்வியை தழுவ நேரிட்டது. இதனால், ஐபிஎல் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி முன்னேறவில்லை. அந்த அணி இஷான் கிஷானை ரூ.11.25 கோடிக்கு வாங்கியது. இந்த விலைக்கு ஏற்ப அவர் விளையாடவில்லை.
மேலும் படிக்க | ஐபிஎல் 2025க்கு பிறகு கழட்டிவிடப்படும் 7 வீரர்கள்!