டெல்லி,
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
இந்நிலையில், டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார்.
இது மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அதேவேளை, தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.