MS Dhoni : ஐபிஎல் 2025 தொடரின் கடைசி ஐபிஎல் போட்டியில் இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் இப்போட்டியில் விளையாடுகிறது. இதுவரை விளையாடி இருக்கும் 13 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, பிளேஆப் வாய்ப்பை இழந்தது. ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலும் இருக்கிறது. இந்த ஐபிஎல் போட்டியில் அதிக நாட்கள் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த அணி என்றால் அது சிஎஸ்கே அணி தான். இருப்பினும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கடைசி போட்டியை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.
தோனி விளையாடுவாரா?
தோனி, இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடப்போகும் கடைசி போட்டி இதுவாகும். அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்து தோனி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதேபோல், ஓய்வு குறித்தும் தோனி முடிவெடுக்கவில்லை. இதுகுறித்து தோனி பேசும்போது, ஐபிஎல் தொடருக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. அதனால், என் உடல்நிலை குறித்து அப்போது முடிவெடுப்பேன் என கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை தோனி அடுத்தாண்டு ஐபிஎல் விளையாடுவார் என்றும், அவர் விரும்பும் வரை விளையாடலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் விளையாடுவாரா? என்பதற்கு இன்னும் 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
சுரேஷ் ரெய்னா நம்பிக்கை
தோனி ஓய்வு குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்றும், அவர் ஓய்வு குறித்து எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயரும். எம் எஸ் தோனியின் நெருங்கிய நண்பராகவும் இருக்கும் சுரேஷ் ரெய்னா இந்த கருத்தை தெரிவித்து இருப்பதால். தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகவே தெரிகிறது.
ஸ்டீபன் பிளமிங் ரியாக்ஷன்
தோனி இன்னும் சிறப்பாக விளையாடுகிறார். அவருடைய ஆட்டம் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. விக்கெட் கீப்பிங் அவரை விட சிறப்பாக செய்ய பிளேயர் உலக அளவில் இப்போதும் இல்லை. எனவே தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விரும்பும் வரை விளையாடுவார் எனக் கூறியுள்ளார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பல ஐடியாக்களை பெற்றிருப்பதாகவும், அடுத்த வருடம் சிஎஸ்கே சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்றும் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.