டெல்லி பிரதமர் மோடி இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை புகழ்ந்துள்ளார். நேற்று பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், இன்று ஒட்டுமொத்த நாடும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. கோபம், உறுதியால் நிரம்பி உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை அமைந்துள்ளது. புதிய நம்பிக்கையையும் சக்தியையும் தந்துள்ளது. எல்லை தாண்டி தீவிரவாத கட்டமைப்புகளை இந்திய படைகள் துல்லியமாக தாக்கியது அசாதாரணமானது. இந்த நடவடிக்கை ஒருமுறை மட்டுமே […]
