டிவிஎஸ் மோட்டாரின் அதிகம் விற்பனையாகின்ற பிரசத்தி பெற்ற ஜூபிடர் ஸ்கூட்டர் வரிசையில் உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற மாடலை விரைவில் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான ஜூபிடர் 110 பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களுடன் அதிகப்படியான பூட்ஸ்பேஸ் கொண்ட மாடலாக ஜூபிடர் 125 போல அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அமோக ஆதரவினை பெற்று தற்பொழுது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற இரண்டாவது ஸ்கூட்டர் பிராண்ட் மாடலாக உள்ளது. […]