பீஜிங்,
சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிற்சாலையில் தீப்பற்றியது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். ரசாயன ஆலையில் இருந்து வாயு கசிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர்கள் சிலரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.