திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் விநாயகர் கோயில் அருகே சாலையோர தடுப்பு சுவர் மீது ஏறி நின்று சாலையை கடந்து சென்றது. சிறுத்தையைக் கண்ட பக்தர்கள் காரில் சென்றபடி வீடியோ எடுத்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர். சிறுத்தை அந்த பகுதியில் சுற்றி வருவதால் பைக்கில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், பஸ், கார்களில் செல்பவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை மூடிகொண்டு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, பக்தர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக பயோ பென்சிங், வலை துப்பாக்கிகள், ஹை பீம் டார்ச்கள் மற்றும் பெப்பர் ஸ்பிரே உள்ளிட்டவற்றை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.