ஏர்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிவிப்பு… எல்லா ஓடிடியும் ஒரே ரீச்சார்ஜில் பார்க்கலாம்..!!

ஏர்டெல் : ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் மிகப்பெரிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ 5, மற்றும் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உட்பட 25 பிளஸ் முன்னணி OTT-களை இனி ஒரே ரீச்சார்ஜில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பார்த்து ரசிக்க முடியும். இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) மே 27 ஆம் தேதி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குப் புதிய இணையற்ற பொழுதுபோக்குப் பேக்குகளை அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ் உள்ளிட்ட 25+ சிறந்த OTT தளங்களை ஒரே ரீச்சார்ஜில் பார்த்து ரசிக்கலாம்.

இவ்வளவு பெரிய மற்றும் சூப்பரான பிளான்களை முதன்முறையாக இந்தியாவிலேயே ஏர்டெல் மட்டுமே வழங்குகிறது. பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு எளிதான வகையில் சப்ஸ்கிரிப்சன் இருக்கும் வகையிலும் இந்தியாவில் ஏர்டெல் மட்டுமே இப்படியான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 1 மாதத்துக்குச் செல்லுபடியாகும் ரூ. 279 என்ற கவர்ச்சிகரமான அறிமுக விலை பிளானில் தொடங்கி ரூ. 750 மதிப்புள்ள பல்வேறு பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களை வாடிக்கையாளர்கள் அணுகலாம். இதன் மூலம் இவ்வளவு பரந்த OTT ஸ்ட்ரீமிங் விருப்பத்தேர்வுகளை அணுக அனுமதிக்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக இது உள்ளது. 

அன்லிமிடெட் பொழுதுபோக்கு வசதிக்காக வரம்பற்ற 5G டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் கொண்ட பொழுதுபோக்குப் பேக்குகளை நிறுவனம் ரூ. 598-ல் தொகுத்து வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இப்போது நெட்ஃபிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ், லயன்ஸ்கேட்ப்ளே, ஏஎச்ஏ, சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், ஈஇராஸ்நவ், மற்றும் ஷெமாரூமீ போன்ற முன்னணி OTT தளங்களில் இருந்து பல்வேறு வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை ஒரே தொகுப்பின் மூலம் பார்த்து ரசிக்கலாம். 

இந்தப் பல்வேறு OTT சேவைகளை ஒரு மலிவு விலை தொகுப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களின் மாறிவரும் பொழுதுபோக்கு விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முயல்கிறது. இது தனிப்பட்ட சந்தாக்களை நிர்வகிப்பதில் சிக்கல்கள் இல்லாமல் அவர்களின் விருப்பமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் அசல் உள்ளடக்கம் உட்பட 16 க்கும் மேற்பட்ட மொழிகளில் சர்வதேச, பாலிவுட் மற்றும் பிராந்திய உள்ளடக்கத்தை சிரமமின்றி கண்டுகளிக்க உதவுகிறது. இந்த உத்திசார்ந்த முயற்சி ஏர்டெல்லின் மதிப்பு முன்மொழிவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத வசதி, நெகிழ்வுத்தன்மை மற்றும் பல்வேறு வகையான பொழுதுபோக்கு விருப்பத்தேர்வுகளை தனித்தன்மையோடு ஏர்டெல் வழங்குகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.