ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தப் போன் அந்நிறுவனத்தின் ஃப்ளேக்‌ஷிப் போனான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக மலிவான விலையில் சந்தையில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்தப் போன் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் மாடலுக்கு மையமாக இருக்கும் வகையில் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளது. அதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 12-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது.

ஒன்பிளஸ் 13எஸ் – சிறப்பு அம்சங்கள்

  • 6.32 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 5,850mAh பேட்டரி
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.54,999 முதல் ஆரம்பமாகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.