பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் முடிவுக்கு வராத நிலையில், உரிமை மீட்பு நடைபயணம் செல்ல அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். கட்சியை அழிக்க தலைமை நிலைய செயலாளர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக கூறியதோடு தனக்கும் ராமதாசுக்கும் தெரியாமல் கட்சி தொண்டர்களிடம் பணம் வசூலித்து அவப்பெயரை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டினார். மேலும், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதிலும் ராமதாஸ் – அன்புமணி இடையே […]
