டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா AI2145 விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து மீண்டும் டெல்லிக்கு திரும்பி பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்தோனேசிய தீவுகளின் கிழக்கில் எரிமலை வெடித்ததில், வானத்தில் 10 கி.மீ உயரத்திற்கு கோபுரம் போல் சாம்பல் படர்ந்தது, இதனால் இந்தோனேசிய ரிசார்ட் தீவான பாலிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள், இன்று (ஜூன் 18) ரத்து செய்யப்பட்டன. கிழக்கு சுற்றுலாத் தீவான […]
