How To Apply Ayushman Bharat Card : ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) என்பது மத்திய அரசு செயல்படுத்தும் காப்பீடு திட்டமாகும். இது தகுதியுடைய குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவைகளை வழங்குகிறது. குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டம் பெரிய நிவாரணமாக உள்ளது.
ஆயுஷ்மான் கார்டு என்றால் என்ன?
இந்த கார்டு பிஎம்ஜேஏஒய் திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குடன் (ABHA) இணைக்கப்பட்டுள்ளது. இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும். இந்த கார்டு உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா (Cashless) மற்றும் ஆவணமில்லா (Paperless) சிகிச்சை பெறலாம்.
ஆயுஷ்மான் கார்டு தகுதி (2025)
இந்த திட்டத்திற்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்தங்கிய வர்க்கத்தினர், தொழிலாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் முக்கியமாக தகுதியுடையவர்கள்.
தகுதியுள்ள நகர்ப்புற தொழிலாளர்கள்:
குப்பை பொறுக்குவோர், வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள், காலணி தைக்கும் தொழிலாளிகள், சுகாதாரத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கொத்தர்கள், தச்சர்கள், ஓவியர்கள், ஓட்டுநர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், டிரைவர், கார் மெக்கானிக்குகள், சலவை தொழில் செய்பவர்கள், கைவினைஞர்கள், தையல்காரர்கள் உள்ளிட்ட வேலைகளை செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்கள்:
ஒரே அறையில் வாழும் குடிசை வீட்டினர், 16-59 வயதுக்குட்பட்ட பெரியவர்கள் இல்லாத குடும்பங்கள், SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஊனமுற்ற உறுப்பினர் உள்ள குடும்பங்கள், 16-59 வயது ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பங்கள், நிலம் இல்லாத, கூலி வேலை செய்பவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கான தகுதி:
– 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் (நகரம்/கிராமம்) தகுதியுடையவர்கள்.
– CGHS, ECHS, CAPF போன்ற அரசு சுகாதார திட்டங்களில் உள்ளவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.
– ESI அல்லது தனியார் மருத்துவ காப்பீடு உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆயுஷ்மான் பாரத் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
– பிஎம்ஜேஏஒய் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் – https://pmjay.gov.in
– மேலுள்ள மெனுவில் “Am I Eligible?” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் மொபைல் எண்ணையும் கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு, OTP மூலம் சரிபார்க்கவும்.
– மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, “PMJAY” திட்டத்தைத் தேர்வு செய்து, உங்கள் விவரங்களை உள்ளிடவும்.
– “Do e-KYC” என்பதைத் தேர்ந்தெடுத்து, “Aadhaar OTP” மூலம் உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும்.
– இரண்டு OTPகளையும் (ஆதார் & மொபைல்) உள்ளிட்டு e-KYC-ஐ முடிக்கவும்.
– 15-20 நிமிடங்கள் காத்திருக்கவும், பின்னர் மீண்டும் உள்நுழையவும்.
– “Download Card” என்பதைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஆதார் OTP மூலம் சரிபார்க்கவும்.
– ஒப்புதல் அளித்து, உங்கள் ஆயுஷ்மான் கார்டைப் பதிவிறக்கவும்.
முக்கிய குறிப்புகள்:
இலவச சிகிச்சை: இந்த கார்டு உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம். குடும்பத்தில் அனைவருக்கும் பயன்படும். ஆதார் கார்டு மற்றும் மொபைல் எண் கட்டாயம். தேவைப்படுபவர்கள் இந்த காப்பீடு திட்டத்தை பெற்று பயன் பெறவும்.