பான் கார்டு, அதார் கார்டு என மத்திய அரசில் இன்று முதல் அமலாக உள்ள 6 விஷயங்களைப் பார்க்கலாம்… வாங்க…
1. ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கலின் கடைசித் தேதி ஜூலை 31 ஆக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களால், வருமான வரி தாக்கல் செய்யும் கடைசித்தேதி வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. இனிமேல் பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும், கட்டாயம் ஆதாரைச் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே, பான் கார்டு வைத்திருப்பவர்கள், இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதாரோடு, பானைக் கட்டாயம் இணைத்துவிட வேண்டும்.

3. இன்றிலிருந்து தட்கல் டிக்கெட் எடுக்க, ஆதார் கட்டாயம். அதை எப்படி இணைக்க வேண்டும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
4. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சில கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கி வந்த விமான விபத்திற்கான இன்சூரன்ஸை ரத்து செய்கிறது. குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டுகளின் கட்டணத்தை உயர்த்துகிறது.
5. IMPS மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் கட்டணம் ரூ.2.50-ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தப்படுகிறது.
6. முதல் மூன்று பரிவர்த்தனைகளுக்குப் பின்னர், கேஷ் ரிசைக்கிளர் மெஷின்களில் (இந்த மெஷின் மூலம் பணம் எடுக்கவும் முடியும், செலுத்தவும் முடியும்) ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும்.