விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன்,

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்), கனடாவின் கார்சன் பிரான்ஸ்டின் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-1 மற்றும் 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சபலென்கா 2-வது சுற்றில் மேரி பவுஸ்கோவா உடன் மோத உள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.