ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் கண்ட்லா துறை​முகத்​தில் இருந்து ஓமன் நாட்​டின் ஷினாஸ் துறை​முகம் நோக்கி ‘எம்டி யி செங் 6’ என்ற எண்​ணெய் கப்​பல் சென்று கொண்​டிருந்​தது. பலாவு நாட்டு கொடி​யுடன் சென்ற இந்த கப்​பலில் இந்​திய மாலுமிகள் 14 பேர் இருந்​தனர்.

இந்த கப்​பலின் இன்​ஜின் அறை​யில் திடீரென தீப்​பற்​றியது. இதுகுறித்து ஓமன் வளை​கு​டா​வில் இருந்த, இந்​திய கடற்​படை​யின் ஐஎன்​எஸ் தபார் போர்க் கப்​பலுக்கு நேற்று முன்​தினம் தகவல் தெரிவிக்​கப்​பட்​டு, உதவி கோரப்​பட்​டது. இதையடுத்து ஐஎன்​எஸ் தபாரில் இருந்து தீயணைப்பு சாதனங்​களு​டன் இந்​திய கடற்​படை வீரர்​கள் படகு மற்​றும் ஹெலி​காப்​டரில்​ விரைந்​து சென்று தீயை அணைத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.