காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் பணியாளர்களை நியமிக்க அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம்: ஐகோர்ட் 

சென்னை: ​டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் காலி மது பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் பணிக்கு தனி​யாக பணி​யாளர்​களை நியமிப்​பது தொடர்​பாக அரசின் பிரத்​யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழல் மாசுவைக் கருத்​தில் கொண்டு டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் விற்​கப்​படும் மது பாட்​டில்​களை திரும்​பப்​பெற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

அதன்​படி மது​பாட்​டில்​களை விற்​கும்​போது ரூ.10 கூடு​தலாக பெற்​றுக்​கொண்​டு, காலி பாட்​டில்​களை ஒப்​படைத்​தால், அந்த ரூ.10 திருப்​பிக் கொடுக்​கப்​படும். இத்​திட்​டம் தமிழகம் முழு​வதும் அமல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்​தப் பணி​களுக்கு டாஸ்​மாக் கடைகளில் தற்​போது பணி​யாற்​றும் ஊழியர்​களை நியமிக்​காமல், தனி​யாக பணி​யாளர்​களை நியமிக்​கக் கோரி​யும், காலி மது​பாட்​டில்​களை சேகரித்து வைக்க தனி இடம் மற்​றும் உட்​கட்​டமைப்பு வசதி​களை ஏற்​படுத்​தித் தரக் கோரி​யும், டாஸ்​மாக் ஊழியர் மாநில சம்​மேளனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்​கு, நீதிபதி கிருஷ்ணன் ராம​சாமி முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தமிழக அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன், ” காலி மது பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் திட்​டம் தொடர்​பாக ஊழியர்​களின் குறை​களைக் கேட்டு ஆய்வு செய்ய டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநர் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே மனு​தா​ரர் சங்​கம், அந்​தக் குழுவை அணுகலாம்” என்​றார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிப​தி, “டாஸ்​மாக் கடைகளில் காலி மது பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் பணிக்கு தனி​யாக ஊழியர்​களை நியமிப்​பது தொடர்​பாக மனு​தா​ரர் சங்​கம் அரசு நியமித்துள்ள பிரத்​யேக குழுவை அணுகலாம்” என உத்​தர​விட்​டு வழக்கை முடித்​து​வைத்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.