உணவுமுறை, எண்ணம் சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் மனிதர்கள் வாழலாம்: ராம்தேவ் கருத்து

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) சில தினங்களுக்கு முன்பு மும்​பை​யில் மாரடைப்​பால் உயிரிழந்தார். இதுகுறித்து யோகா குரு பாபா ராம்​தேவ் கூறிய​தாவது: மனிதர்​களின் இயற்​கை​யான ஆயுட்​காலம் 150 முதல் 200 ஆண்​டு​களாகும். உணவு​முறை, எண்​ணங்​கள், உடல் அமைப்பு சரி​யாக இருந்​தால் 100 ஆண்​டு​களுக்கு மேலும் வாழலாம்.

ஆனால் நாம் 100 ஆண்​டு​களில் சாப்​பிட வேண்​டிய உணவை, 25 ஆண்​டு​களி​லேயே சாப்​பிட்டு விடு​கிறோம். மேலும், மூளை, இதயம், கண்​கள், கல்​லீரல் போன்ற உறுப்​பு​களுக்கு அதிக வேலை​ கொடுக்​கிறோம். இதனால் இளம் வயதிலேயே மரணம் வந்​து​விடு​கிறது.

எனக்கு தற்​போது 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால் யோகா, உணவு​முறை, நடத்​தை​யால் சிறந்த ஆரோக்​கிய​மான, வாழ்க்​கையை வாழ்​கிறேன். இதனால் நான் ஆரோக்​கிய​மாக​வும், முழு ஆற்​றலுட​னும் இருக்​கிறேன். நடிகை ஷெபாலி 42 வயதிலேயே இறந்​து​விட்​டார். அவரது உடலில் உள்ள `ஹார்ட்​வேர்’ நன்​றாக இருந்​தது.

ஆனால் `சாப்ட்​வேர்’ பழு​தாகி​விட்​டது. நமது உடலில் உள்ள ஒவ்​வொரு செல்​லுக்​கும் இயற்​கை​யான ஆயுட்​காலம் உண்​டு. அதில் தலை​யிடும்​போது, அது உடலுக்​குள் பேரழி​வு​களை ஏற்​படுத்​தி, மாரடைப்பு போன்ற சூழ்​நிலைகளுக்கு வழி​வகுக்​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.