மதுரை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட டிஐஜி வீ. வருண்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் அவதூறு தகவல்களை பரப்பி, உள்நோக்கத்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார். இதனால் நானும், என் குடும்பத்தாரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். […]
