Aadhaar SIM card fraud check : சிம் கார்டு மோசடிகள் மற்றும் இன்னொருவரின் ஆதாரை அடையாளமாக பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் அதிகமாகிக் கொண்டிருப்பதால், உங்கள் ஆதார் அட்டையுடன் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நீங்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் யாரோ ஒருவரின் ஆதார் அட்டையை அவருக்கே தெரியாமல் பயன்படுத்தி புதிய சிம் கார்டுகளைப் பெறுகின்றனர். இதன் மூலம் மோசடி பரிவர்த்தனைகள், சைபர் குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால், நிதி இழப்புக்கு வழிவகுக்கிறது.
ஆதார் மூலம் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது என்பதை கண்டுபிடிப்பது எப்படி?
பொதுமக்கள் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட எண்களைக் கண்டறிய உதவுவதற்காக தொலைத்தொடர்புத் துறை (டாட்) TAFCOP போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.
– https://tafcop.dgtelecom.gov.in க்குச் செல்லவும்
– உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு “OTP Send” என்பதைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
– உங்கள் ஆதாரில் இணைக்கப்பட்ட அனைத்து மொபைல் எண்களின் பட்டியலையும் நீங்கள் காண்பீர்கள்.
– நீங்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத எண்களைக் கண்டால், செயலிழக்கச் செய்ய போர்டல் வழியாக உடனடியாக புகார் செய்யலாம்.
ஆதார், சிம் கார்டு அடையாளங்களை பாதுகாக்க வழிமுறைகள்
– ஆதார் நகல்களை தேவையற்ற இடங்களில் கொடுக்காதீர்கள்
– அவசியம் என்றாலும் மாஸ்க்டு ஆதார், uidai போர்ட்டலில் கிடைக்கும், அதனை பயன்படுத்தவும்.
– சிம் கார்டு PIN ஐப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கலாம்.
– உங்கள் மொபைல் செயலிகளின் செயல்பாடு சந்தேகத்திற்கிடமாக உள்ளதா என்பதை கண்காணித்து நீக்குவது குறித்து முடிவெடுக்கவும்.
– ஆதார் அல்லது மொபைல் தகவலைப் புதுப்பிக்கக்கூறி, ஏதேனும் SMS அல்லது மின்னஞ்சல்களிலிருந்து வரும் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.
மத்திய அரசின் TAFCOP இணையதளம் மூலம் ஆதார் மூலம் சிம் கார்டு மோசடிகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். எனவே, நீங்கள் அவ்வப்போது உங்களை பற்றிய தகவலை செக் செய்து விழிப்புடன் இருந்து கொள்ளுங்கள்.