லண்டன்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் கலோவே ஜோடி, அர்னியடோ (மொனாக்கோ)- மானுவல் குனர்ட் (பிரான்ஸ்) இணையுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய யுகி பாம்ப்ரி ஜோடி 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Related Tags :