சென்னை: கடலூர் துறைமுகத்தை தனியாருக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் வகையில், தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைழுத்தாகி உள்ளது. கடலூர் துறைமுகத்தை 35 ஆண்டுகளுக்கு இயக்குவதற்காக தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சார்பாக கடலூர் துறைமுகம் மஹதி என்ற கடல்சார் தனியார் லிமிடெட் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கையெழுத்திட்டார். ஏற்கனவே கடலூர் துறைமுகத்தை 50ஆண்டுகளுக்கு குத்தகை என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்க தமிழ்நாடு அரசு கடந்த 2024ம் […]
