உ.பி.யில் அரசியலாகும் காவடி யாத்திரை: தாபா உரிமையாளர்களை சோதனை செய்ய களம் இறங்கிய 30 இந்து அமைப்புகள்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் ஸ்ரவண மாதத்தை முன்​னிட்டு காவடி யாத்​திரை தொடங்க உள்​ளது. யாத்​திரை செல்​லும் பாதைகளில் உணவகம் நடத்​தும் உரிமை​யாளர் பெயர் உள்​ளிட்ட விவரங்​களை அறி​விப்பு பலகை​களில் எழுதி வைக்க உ.பி. அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இந்த உத்​தரவை அமல்​படுத்​துகின்​றனரா என்று பிரபல துறவி யோகா குரு யஷ்வீர் மஹராஜ் தனது 5,000 சீடர்​களு​டன் சோதனை நடத்தி வரு​கிறார். அதன்​படி உணவக பணி​யாளர்​களின் ஆடைகளை அவிழ்த்து சோதித்​தது சர்ச்​சை​யானது. எனினும், உணவக பணி​யாளர் தஜும்​முல் என்​பவர், கடை உரிமை​யாளர் சொன்​னபடி கோபால் என பெயரை மாற்றி வேலை செய்​வ​தாக ஒப்​புக்​கொண்​டார்.

இதையடுத்து மேலும் 30 இந்​துத்​துவா அமைப்​பினர் உணவகங்​களின் உரிமை​யாளர் அடை​யாளங்​களை கண்​டறிய களம் இறங்​கி​யுள்​ளனர். அவர்​கள் ராமர், ஹனு​மர் மற்​றும் சிவன் படங்​களு​டன் கும்​பலாக கடைகளுக்கு செல்​கின்​றனர். பிறகு, கடை​யில் உள்ள பேடிஎம் க்யூஆர் கோடு​களை ஸ்கேன் செய்​து உண்மையான பெயர்களை கண்டுபிடிக்கின்றனர்.

இதுகுறித்து இந்து சங்​கர்ஷ் சமிதி உறுப்​பினர் நரேந்​தர் சிங் தோமர் கூறுகை​யில், ‘‘எச்​சில் உள்​ளிட்ட அசுத்​த​மானவற்றை உணவில் கலந்து சிலர் எங்​கள் மத நம்​பிக்​கை​யில் விளை​யாடு​கின்​றனர். சனாதனத்தை காக்​கும் இப்​பணி​யில் எங்​களிடம் உண்​மை​யான பெயரை கூறு​வதற்கு என்ன தடை’’ என்று தெரி​வித்​தார்.

உ.பி.துணை முதல்​வர்​களில் ஒரு​வ​ரான பிரஜேஷ் பாதக் கூறு கை​யில், ‘‘உ.பி​.யில் குறிப்​பிட்ட சமூகத்​தினர் சிலர் காவடி யாத்​திரை​யின் புனிதத்தை கெடுக்க முயற்​சிக்​கின்​றனர். இதனால், உ.பி. அரசு உத்​தரவு சர்ச்​சை​யா கிறது. இந்த சர்ச்​சைக்கு அவர்​கள்​தான் காரணமே தவிர அரசு அல்ல’’ என்​றார்.

உ.பி.யின் முக்​கிய மவுலானா ஷகாபுதீன் ராஜ்வீ பரேல்வி கூறுகை​யில், ‘‘எந்த ஒரு முஸ்​லி​மும் தனது உண்​மை​யான பெயருடன் மத அடை​யாளத்தை மறைப்​பது தவறு. உண்​மை​யான முஸ்​லிம்​கள் இவ்​வாறு செய்ய மாட்​டார்​கள் என்​ப​தால் தயங்​காமல் தன் மத அடை​யாளங்​களை முஸ்​லிம்​கள்​ கூற வேண்​டும்​’’ என்​று கேட்​டுக்​ கொண்​டு உள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.