மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி ஜனவரி முதல் செயல்படும்: தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

மதுரை: மதுரை எய்ம்ஸ் தலை​வர் பிர​சாந்த் லவானியா தலை​மையி​லான ஆலோ​சனைக் கூட்​டம் தோப்​பூர் எய்ம்ஸ் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில், எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ், எம்​.பி.க்​கள் மாணிக்​கம் தாகூர், ராணி கு​மார், சந்​திரசேகரன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

பின்​னர் எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எய்ம்ஸ் 4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்​று, ராம​நாத​புரத்​தில் மாணவர்​கள் படித்து வரு​கின்​றனர். தோப்​பூரில் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டிடப் பணி தொடங்​கப்​பட்​டு, பணி​கள் இரவு பகலாக நடை​பெற்று வரு​கின்​றன. வரும் டிசம்​பருக்​குள் பணி​கள் நிறைவடை​யும். 2026 ஜனவரி மாதம் முதல் புதிய கட்​டிடத்​தில் கல்லூரி செயல்படும்.

ஜனவரிக்​குள் ஆய்​வகங்​கள், கல்​லூரி​யில் தங்​கிப் படிக்​கும் மாணவர்​களுக்​கான வசதி​கள் மற்​றும் 150 படுக்​கைகளு​டன் கூடிய மருத்​து​வ​மனை உள்​ளிட்​டவை அமைக்​கப்​படும். 2027-க்​குள் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை பணி​கள் நிறைவு​பெற்​று, முழு​மை​யாக செயல்​படத் தொடங்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.