பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு இடைக்கால தடை இல்லை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: பிஹாரில் தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள வாக்​காளர் பட்​டியல் திருத்த பணி​களுக்கு இடைக்​கால தடை​ வி​திக்க உச்ச நீதி​மன்​றம் நேற்று மறுத்​து​விட்​டது. அதே​நேரம், அவசர வழக்​காக விசா​ரிக்க நீதி​மன்​றம் ஒப்​புக்​கொண்​டது. தகு​தி​யான குடிமக்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் சேர்ப்​ப​தை​யும், தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்​கு​வதை​யும் முக்​கிய நோக்​க​மாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணி​களை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது.

அதன்​படி, பிஹாரில் 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள் தாங்​கள் இந்​தி​யாவை சேர்ந்​தவர்​கள் என்​பதை நிரூபிப்​ப​தற்கு பிறப்​புச் சான்​றிதழ், பாஸ்​போர்ட் போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த முடிவுக்கு காங்​கிரஸ் தலை​மையி​லான இண்​டியா கூட்​டணி கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் பல்​வேறு தரப்​பினர் மனுத்​தாக்​கல் செய்​துள்​ளனர்.

இந்த மனுக்​கள் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சுதான்சு துலி​யா, ஜோய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர்​கள் தரப்​பில் கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்​ளிட்​டோர் ஆஜராகி, ‘‘தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த திருத்​தப் பணி​யால் லட்​சக்​கணக்​கான பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​படும் என்​றும், பெண்​களும், தாழ்த்​தப்​பட்​டோரும் மிக மோச​மாகப் பாதிக்​கப்​படு​வார்​கள்’’ என்றும் வாதிட்​டனர்.

இந்த விவ​காரத்​தில் அவசர விசா​ரணை நடத்த வேண்​டும் என்ற மனு​தா​ரர்​களின் கோரிக்​கையை ஏற்று வரும் வியாழக்​கிழமை (ஜூலை 10) மனு விசா​ரணைக்கு எடுத்​துக்​கொள்​ளப்​படும் என்று நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். எனினும், பிஹார் வாக்​காளர்​ பட்டியலில்​ சிறப்​பு தீவிர திருத்​த பணி​களுக்​கு இடைக்​​கால தடை வி​திக்​க நீதிப​தி​கள்​ மறுத்​து விட்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.