புதுடெல்லி,
பழம்பெரும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார்.ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகர் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தனது அற்புதமான நடிப்பால் பல தலைமுறைகளாக பார்வையாளர்களை கவர்ந்தவர். சமூக சேவையிலும் முன்னணியில் இருந்த அவர், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்.”
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.