WTC Points Table: இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 66.67 வெற்றி சதவீதத்துடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில், ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கையால், இங்கிலாந்து அணி தற்போது புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்துள்ளது.
அதன்படி லண்டன் லார்ட்ஸில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கூறி, ஐசிசி இங்கிலாந்து புள்ளிகளில் கைவைத்துள்ளது. இதனால், இங்கிலாந்து அணி 24 புள்ளிகளில் இருந்து 22 புள்ளிகளுக்கு இங்கிலாந்து அணி குறைப்பட்டு இருக்கிறது. மேலும், அவர்களுடைய வெற்றி சதவீதமும் அடிவாங்கி உள்ளது. இந்த அபராததிற்கு முன்பு இங்கிலாந்து அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் இருந்த நிலையில், தற்போது 61.1 புள்ளிகளுக்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இறங்கி உள்ளது.
இந்தியா அணி எத்தனையாவது இடம்
ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை முழுவதுமாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. அந்த அணி 36 புள்ளிகளுடன் 100 சதவீத வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து இலங்கை அணி 3 போட்டிகள் விளையாடி 1 வெற்றி மற்றும் 1 டிராவுடன் 16 புள்ளிகளுடன் 66.67 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது.
3வது இடத்தில் இலங்கை அணியும் 4வது இடத்தில் இந்திய அணியும் உள்ளது. இந்திய அணி மூன்றில் 2 தோல்விகளை பெற்றதால், 12 புள்ளிகளுடன் 33.33 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. வரும் போட்டிகளில் வெற்றிபெறுவதை பொறுத்து இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறும். இதையடுத்து வங்கதேச அணி 5வது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 6வது இடத்திலும் உள்ளது. இதில் வங்கதேசம் அணி 2 போட்டிகளில் ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வியை பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலுமே தோல்வியை தழுவியுள்ளது.
இங்கிலாந்து அபராதம்
ஐசிசி விதிப்படி எத்தை ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருக்கிறதோ, அத்தனை புள்ளிகள் அபராதமாக விதிக்கப்படும். உதாரணத்திற்கு ஒரு ஓவர் குறைவாக வீசப்பட்டிருந்தால், 5 சதவீத போட்டியில் ஊதியம் அபராதமாக விதிக்கப்படும். அந்த வகையில் இங்கிலாந்து அணி வீரர்கள் இரண்டு ஓவர்கள் தாமதமாக வீசியிருந்ததால் போட்டி ஊதியத்தில் இருந்து 10 சதவீத அபராதமும், 2 புள்ளிகளும் குறைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிங்க: பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: ஸ்ரீகரண் அசத்தல் பேட்டிங்.. கடைசிப் பந்தில் மாஹே அணி த்ரில் வெற்றி!
மேலும் படிங்க: Test: அதிக முறை பேட்டர்களை டக்-அவுட்டாக்கிய டாப் 10 பௌலர்கள்!