ராசி இல்லாத பும்ரா? இந்திய அணிக்கு அவர் தேவையே இல்லையா – உண்மை என்ன?

India vs England, Jasprit Bumrah: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. 

தற்போதைய நிலவரப்படி இத்தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது, இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளன. 4வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

India vs England: சுப்மான் கில், கம்பீருக்கு அழுத்தம் 

இந்திய அணிக்கு இனி வரும் 2 போட்டிகளும் மிக முக்கியமானதாகும். மேலும், கேப்டன் சுப்மான் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதும் அதிக அழுத்தம் நிலவுகிறது. விராட் கோலி, ரோஹித் போன்றோர் இல்லாத ஒரு இந்திய அணி இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் தற்போது பின்னடவை சந்தித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து தொடரை இழக்கும் கட்டத்தில் கௌதம் கம்பீர் இருக்கிறார்.

India vs England: எந்த போட்டியில் விளையாடுவார் பும்ரா?

இது ஒருபுறம் இருக்க, நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பிட்னஸ் இந்திய அணிக்கு மிக முக்கியம் எனலாம். வெளிநாட்டில் ஜஸ்பிரித் பும்ராவின் தேவை இந்திய அணிக்கு அதிகம் உள்ளது. அப்படியிருக்க அவர் இந்த தொடரிலேயே மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது வரை 2 போட்டிகளில் விளையாடிவிட்டார். இன்னும் மீதம் இருக்கும் 2 பந்துகளில் ஒன்றில் மட்டுமே அவர் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3வது டெஸ்ட் போட்டி ஜூலை 14ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், சுமார் 10 நாள்கள் இடைவெளிக்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி 4வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதாவது, பும்ரா ஓய்வெடுக்க நீண்ட நாள்கள் கிடைத்திருக்கிறது. 4வது போட்டிக்கும் 5வது போட்டிக்கும் வெறும் 3 நாள்களே இடைவெளி உள்ளது. இதனால், பும்ரா 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு 5வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

India vs England: பும்ரா குறித்த புள்ளிவிவரங்கள்

இந்த வேளையில், பும்ரா குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, பும்ரா இல்லாத டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிகம் வெற்றி பெறுகிறது என்றும் பும்ரா விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிகம் தோற்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அது எப்படி பும்ரா தானே ஆபத்து காலத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார் என நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த தகவல் உண்மைதான் என ஒரு புள்ளிவிவரமும் உள்ளது. அதனை இங்கு காணலாம். 

இந்திய அணி பும்ரா உடன் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 7இல் தோற்றுள்ளது. சமீபத்திய போட்டிகளை பார்த்தால் அவர் இல்லாமலும் இந்திய அணி அதிக போட்டிகளை தோற்றுதான் இருக்கிறது. அதாவது காயம் மற்றும் வேலைப் பளூவால் பும்ரா இல்லாமல் இந்திய அணி விளையாடிய கடைசி 10 போட்டிகளில் 5இல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. அதுவும் ஆஸ்திரேலியா உடன் சொந்த மண்ணில் 2 போட்டிகளிலும், அந்நிய மண்ணில் 2022இல் வங்கதேசத்துடனும், 2023இல் மேற்கு இந்திய தீவுகள் அணியுடனும் தலா 1 போட்டியில் இந்தியா வென்றிருக்கிறது. மற்றொன்று சில நாள்களுக்கு முன் நடந்த எட்ஜ்பாஸ்டன் தொடர்.

India vs England: அந்நிய மண்ணில் பும்ரா

பும்ரா அவர் விளையாடிய கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் (19 இன்னிங்ஸில்) 53 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், 59 ரன்களையும் அடித்துள்ளார். இதில் 5 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். அதே நேரத்தில் இந்தியாவுக்கு வெளியே பும்ரா விளையாடிய கடைசி 10 போட்டிகளில் இந்திய அணி 2இல் மட்டுமே வென்றுள்ளது. 7இல் தோற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியா உடனான ஒரே ஒரு போட்டி மட்டுமே டிராவானது. இந்தியாவுக்கு வெளியே பும்ரா விளையாடிய கடைசி 10 போட்டிகளில் (18 இன்னிங்ஸ் 61 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 86 ரன்களையும் அடித்துள்ளார். 

India vs England: 2018இல் அறிமுகமான பும்ரா

இந்திய அணி இந்தியாவுக்கு வெளியே பும்ரா இல்லாமல் விளையாடிய கடைசி 10 போட்டிகலில் இந்தியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. மூன்றில் தோற்று, 2இல் டிரா செய்துள்ளது. ஆனால், பும்ராவின் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை பார்த்தால், அவர் விளையாடாத போட்டிகளில் இந்திய அணி அதிக வெற்றிகளை பெற்றிருக்கிறது. 

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் பும்ரா இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதன்பின் அவர் வெளிநாட்டு மண்ணில் இந்தியா விளையாடிய 9 போட்டிகளை மட்டுமே தவறவிட்டுள்ளார். அதில் 5 போட்டிகளை இந்தியா வென்றிருக்கிறது.

India vs England: பும்ரா இல்லாத இந்தியா 

அதாவது, பும்ரா அறிமுகமான பின்னர் இந்திய அணி 73 டெஸ்ட் போட்டிகளை விளையாடி உள்ளது. அதில் ஜஸ்பிரித் பும்ரா 47 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் 20 போட்டிகளில் இந்தியா வென்றிருக்கிறது, 23 போட்டிகளில் தோற்றுள்ளது, 5 போட்டிகள் டிராவாகி உள்ளது. மாறாக, பும்ரா இல்லாமல் இந்தியா 27 போட்டிகளில் விளையாடி 19 போட்டிகளில் வென்று, 5இல் தோற்று, 3இல் டிரா செய்துள்ளது. பும்ரா அறிமுகமான பின்னர் பும்ரா உடன் இந்திய அணியின் வெற்றி விகிதம் 43% ஆகவும், பும்ரா இல்லாமல் 70% ஆகவும் உள்ளது.

India’s record with and without Jasprit Bumrah since his debut pic.twitter.com/hPvyIku24i

— Sky Sports Cricket (@SkyCricket) July 8, 2025

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பும்ரா இல்லாமல் இந்திய அணி குறைவான போட்டிகளிலேயே தோல்வியை தழுவியிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரிலும் பும்ரா விளையாடிய 2 போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது. விளையாடாத ஒரே ஒரு போட்டியில் வென்றுவிட்டது. எனவே, இந்திய அணி ரசிகர்கள் பும்ரா விளையாடினால் நல்லதா கெட்டதா என்ற குழப்பத்தில் உள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.