IND vs ENG: இங்கிலாந்து – இந்தியா மோதும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி கோப்பை தொடர் கடந்த மாந்தம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இச்சூழலில் வரும் 23ஆம் தேதி இத்தொடரின் 4வது போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், வரும் போட்டியில் ரிஷப் பண்ட்டை வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் களம் இறக்க வேண்டாம் என முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் களம் இறக்கக்கூடாது
ரிஷப் பண்டிற்கு கடந்த போட்டியின் முதல் நாளின் போது, இடது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பதிலாக துரூவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்தார். அவர் பேட்டிங் மட்டும் செய்தார். விரல் காயத்துடன் முதல் இன்னிங்ஸில் அவர் 74 ரன்கள் விளாசி இருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக ஐசிசி பாட்காஸ்டில் பேசிய முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரிஷப் பண்டால், விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை என்றால், அவரை பேட்டிங்கும் செய்ய விடக்கூடாது. அதாவது அவரை வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் களம் இறக்கக்கூடாது என நினைக்கிறேன்.
ஏனெனில் அவர் ஃபீல்டிங் செய்ய வேண்டி இருக்கும். அவர் ஃபீல்டிங் செய்வது இன்னும் மோசமானதாக இருக்கும். விக்கெட் கீப்பராக இருக்கும்போது, அவர் கையுறை அணிந்திருப்பார். அது ஓரளவுக்காது பாதுகாப்பாக இருக்கும். அதுவே கையுறைகள் இல்லாமல் ஃபீல்டிங் செய்யும்போது, பந்து விரலில் பட்டால் அது காயத்தை அதிகப்படுத்தும் என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ரிஷப் பண்ட்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால், அவர் ஓய்வெடுத்து ஓவல் டெஸ்டில் விளையாடுவது சிறந்ததாக இருக்கும். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு அவரை அணிக்குள் கொண்டு வரும் பட்சத்தில் அவர் விக்கெட் கீப்பங் மற்றும் பேட்டிங் என இரண்டையும் செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
ரிஷப் பண்டிற்கு பதிலாக துரூவ் ஜுரெல்
வரும் 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ஒருவேளை சேர்க்கப்படவில்லை என்றால், அவருக்கு பதிலாக துரூவ் ஜுரெல் அணிக்குள் வருவார். இதுவரை இந்தியாவுக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள துரூவ் ஜுரெல், 202 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு அரைசதம் அடங்கும். அவரது சராசரியாக 40.40ஆக உள்ளது.
மேலும் படிங்க: இந்தியாவுக்கு தோல்வி நிச்சயம்; இந்த வீரர் இல்லாவிட்டால்… கம்பீருக்கு துணிச்சல் இருக்கா?
மேலும் படிங்க: 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்ல முகமது கைஃப் கொடுத்த முக்கிய அட்வைஸ்..!!