டோக்கியோ,
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சீனாவின் வாங் ழியி உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வாங் ழியி 13-21, 21-11, 21-12 என்ற செட் கணக்கில் அனுபமா உபாத்யாயாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட அனுபமா உபாத்யாயா தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :