தென் மாவட்ட நிர்வாகிகளுடன் 25-ல் டிடிவி தினகரன் ஆலோசனை

சென்னை: தென் மாவட்​டங்​களில் உள்ள தொகு​தி​வாரி​யாக அமமுக நிர்​வாகி​களு​டன் வரும் ஜூலை 25-ம் தேதி முதல் பொதுச் செயலா​ளர் டிடிவி தினகரன் ஆலோ​சனை நடத்த உள்​ளார். தேர்​தலை எதிர்​கொள்​வதற்​காக தென் மாவட்ட தொகு​தி​கள் வாரி​யாக அமமுக நிர்​வாகி​களு​டன் தினகரன் ஆலோ​சனை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார்.

இது தொடர்​பாக அமமுக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​: சிவகங்கை மாவட்​டம், சிவங்கை தொகு​தி​யில், 25-ம் தேதி காலை 10 மணிக்​கு, மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் உள்ள ராஜ் மஹாலில் பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெறும். 26-ம் தேதி, மாலை 4 மணிக்கு மதுரை மாவட்​டம் திரு​மங்​கலம் தொகு​தி​யில், மேலக்​கோட்​டை​யில் உள்ள ஜிகேஎம் பேலஸில் நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெறும்.

மேலும், திருநெல்​வேலி மாவட்​டம் நாங்​குநேரி​யில் 28-ம் தேதி மாலை 4 மணிக்​கு,சுப்​புலட்​சுமி திருமண மஹாலிலும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்​கம் தொகு​தி​யில் 30-ம் தேதி காலை 10 மணிக்​கு, திரு​வானைக்​காவல் சாலை​யில் உள்ள ஏஜி திருமண மஹாலிலும் நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெறும்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.