Ind vs Eng: இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
காயத்துடன் விளையாடிய பண்ட்
இந்த போட்டியில் முதலில் இந்திய அணியே பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களை அடித்துள்ளது. இச்சூழலில் பேட்டிங்கின் போது ரிஷப் பண்ட்டிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் களத்தில் இருந்து 37 ரன்களில் இருந்த நிலையில் பாதிலேயே வெளியேறினார். பின்னர் இந்திய அணிக்காக மீண்டும் காயத்துடன் களத்திற்கு திரும்பி அரைசதம் விளாசினார். ரிஷப் பண்ட் ஃபவுண்டரிகளை மட்டுமே அடித்தார். அவர் ரன் ஓட கஷ்டப்பட்டார்.
ரிஷப் பண்ட்டிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவர் 6 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக அவர் மீதம் இருக்கும் ஒரு போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பும் பட்சத்தில் அவர் களம் இறக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக வீரருக்கு வாய்ப்பு
இச்சூழலில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்படுவார் என செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக தமிழக வீரர் நாராயன் ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இம்முறையும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
Narayan Jagadeesan: தமிழக வீரர் நாராயன் ஜெகதீசன், 52 முதல் தர ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் அவர் 3373 ரன்களை குவித்துள்ளார். இதில் 10 சதம் மற்றும் 14 அரைசதம் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 321ஆக உள்ளது. மேலும், சராசரி 47.50ஆக உள்ளது. ஜெகதீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: குப்பை பந்துவீச்சு’ பும்ராவை விளாசி தள்ளிய ரவி சாஸ்திரி
மேலும் படிங்க: ஆர்சிபி வீரர் மீது POCSO வழக்கு.. கிரிக்கெட் வீராங்கனையை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை!