திருவனந்தபுரம் சபரிமலைக்கு டிராக்டரில் சென்ற எடிஜிபி கலால் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அஜித்குமர் என்னும் கேரள ஆயுதப்படை பட்டாலியன் ஏடிஜிபி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம் நடந்தபோது பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு டிராக்டரில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்கு பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் இதில் டிரைவர் தவிர வேறு யாரும் பயணம் செய்யக்கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் […]
