`இது விஜய்க்கு எழுதிய கதை’ – சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `கிழக்குச் சீமையிலே’ விக்னேஷ்

கிழக்குச் சீமையிலே, சின்னதாய், பசும்பொன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல், சொந்த ஊரான ஈரோடு சென்று தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது “ரெட் பிளவர்” என்ற படத்தில் மீண்டும் நாயகனாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ரெட் பிளவர் திரைப்பட ப்ரோமோஷன்

சந்திரமுகி, இந்தியன் 2, எந்திரன் உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் பணியாற்றிய ஆண்ட்ரூ பாண்டியன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் மாணிக்கம் மற்றும் நடிகர் விக்னேஷ் கலந்து கொண்டனர்.

விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால்..!

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விக்னேஷ், “30 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். இடையில் தொழில் விஷயமாக சொந்த ஊர் சென்று விட்டேன். இப்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளேன். இந்த படத்தை இயக்கும் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் என்னிடம் கதையை கூறினார். கதையை கேட்டு வியந்தேன் அப்போது அவர் இந்த கதை நடிகர் விஜய்க்கு எழுதி வைத்திருந்தேன். அவர் அரசியலுக்கு சென்று விட்டதால் உங்களை வைத்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம் எனக் கூறினார். அதன் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நடிகர் விக்னேஷ்

2047 ஆண்டு நடக்க போகும் சம்பவத்தை கற்பனையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து முடிந்த ஆபரேஷன் சிந்தூர் போன்று இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடக, தமிழகம் ஆகிய பகுதிகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி 400 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “இதற்கு முன்பு கிராமிய கதைகளில் நடித்து வந்தேன் இந்த கதைக்கு நடிக்க முடியுமா என வியந்து அதற்கு தக்கபடி என்னை மாற்றிக் கொண்டேன். முன்பு 99 கிலோ இருந்தேன் தற்போது 66 கிலோவுக்கு குறைத்துள்ளேன். திரைத் துறையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறேன். ரஜினி, கமல், சூர்யா, விஜய் போல எனக்கு ஆதரவு கொடுங்கள்.

தியேட்டருக்கு சென்று “ரெட் பிளவர்” திரைப்படத்தை பாருங்கள். இந்த படத்தின் டிரைலரை இதுவரை 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர்” என தெரிவித்தார். இந்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு என தயாரிப்பாளர் மாணிக்கத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ரூபாய் ஒன்பது கோடி செலவில் பணம் தயாரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.