Mohammed Siraj Drops Harry Brook Catch: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது அதன் கிளைமேக்ஸ் கட்டத்தை எட்டியிருக்கிறது.
Mohammed Siraj: சுவாரஸ்ய கட்டத்தில் இந்திய அணி
ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற, அடுத்து எட்ஜ்பாஸ்டனில் வரலாற்று வெற்றியை பெற்று இந்தியா தொடரை சமன் செய்தது. ஆனால், புகழ்பெற்ற லார்டஸில் இந்தியா கடுமையான போராட்டத்தை வெளிகாட்டினாலும் 22 ரன்களில் தோற்றது. இதனால் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. 4வது டெஸ்ட் போட்டியையும் இந்தியா போராடி டிரா செய்தது.
இதனால், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியது. அதாவது இங்கிலாந்து இந்த போட்டியை டிரா செய்தாலே போதும் கோப்பையை கைப்பற்றிவிடலாம். ஆனால் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும். டிரா செய்தாலோ அல்லது தோற்றாலோ தொடரையும், கோப்பையையும் பறிகொடுக்க நேரிடும்.
அந்த வகையில், 5வது டெஸ்ட் தொடரும் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டி உள்ளது. இந்திய அணி இங்கிலாந்துக்கு 374 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், நேற்று இங்கிலாந்து அணி 50 ரன்களை அடித்து ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் உடன் கேப்டன் ஒல்லி போப் தொடங்கினார். டக்கெட் அரைசதம் அடித்து சீறிப்பாயும் நேரத்தில், பிரசித் கிருஷ்ணாவின் அற்புதமான செட்அப்பில் வீழ்ந்தார், அவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Mohammed Siraj: உள்ளே வந்த புரூக்
அதையடுத்து, ஜோ ரூட், ஒல்லி போப் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட்டத்தை கொண்டுசென்றார். இடையே போப் சற்று அதிரடி காட்ட தொடங்கினார். அப்போது சிராஜ் வீசிய Incoming பந்தில் சிக்கி எல்பிடபிள்யூ முறையில் போப் ஆட்டமிழந்தார், அவர் 27 ரன்களை அடித்திருந்தார்.
இந்தச் சூழலில் உள்ளே வந்த ஹாரி புரூக் முதல் 18 பந்துகளுக்கு பொறுமை காத்து வந்தார். ஆகாஷ் தீப் வீசிய ஒருவரில் அதிரடியை கையில் எடுக்க தொடங்கினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்திருக்க அடுத்த ஓவரே பிரசித் கிருஷ்ணா வீச வந்தார்.
Mohammed Siraj: புரூக் கொடுத்த கேட்ச்… தவறவிட்ட சிராஜ்
அந்த ஓவரின் முதல் பந்தில், பிரசித் கிருஷ்ணா வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் ஹாரி புரூக் ஃபைன் லெக் திசையில் தூக்கி அடிக்க பந்து சிராஜ் கையில் சரியாக விழுந்தது, அவரும் அதை பிடித்துவிட்டார். ஆனால், பவுண்டரி லைனை பார்க்காமல் சிராஜ் அதை மிதிக்க அதை சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. அதிரடியை தொடங்கிய போதே புருக் கொடுத்த வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டிருப்பது பெரிய சங்கடம் எனலாம். பின் அந்த ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அடித்து பிரசித் கிருஷ்ணாவை தண்டித்தார், இதனால் சிராஜ் மன வருத்தமடைந்தார்.
Mohammed Siraj tak pic.twitter.com/J2KUnyGHvp
— Sky Sports Cricket (@SkyCricket) August 3, 2025
தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி இந்த இன்னிங்ஸில் 50 ஓவர்களுக்கு 228 ரன்களை அடித்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஹாரி புரூக் 74 ரன்களிலும், ஜோ ரூட் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டை எடுத்துள்ளார்.
146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து வலுவாக உள்ளது. இன்னும் 7 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா உள்ளது. புரூக் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டத்தை இங்கிலாந்தின் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வாரா, இல்லை இந்தியா மீண்டும் அவரது விக்கெட்டை கைப்பற்றி ஆட்டத்தை தன்வசப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க | பும்ரா இல்லாத போட்டியில் மட்டும் எப்படி நல்ல பந்து வீசுறீங்க? சீராஜ் சொன்ன சீக்ரெட்!
மேலும் படிக்க | ஓவல் டெஸ்டில் இந்திய வீரர்களின் வரலாற்று சாதனை! பரபரப்பான கட்டத்தில் 5வது டெஸ்ட்
மேலும் படிக்க | ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் – 55 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனை!