கர்நாடக மாநில போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி KSRTC ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு, மைசூரு, தும்கூர், பெலகவி, ஹாவேரி, ஹூப்ளி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொது போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் மற்றும் பேருந்தை நம்பியுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக ஊழியர்களை கொண்டு குறைந்த அளவிலான பேருந்துகளை போக்குவரத்துக் […]
