‘வாக்கு திருட்டு’ பிரச்சாரம்: புதிய இணையதளம் தொடங்கினார் ராகுல்; மீண்டும் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்​தல் ஆணை​யம் மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாக புதிய இணை​யதளத்தை தொடங்​கி, அந்த பிரச்​சா​ரத்​தில் பொது​மக்​கள் இணைய வேண்​டும் என்​று கோரிக்கை விடுத்​துள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா, கர்​நாட​கா, ஹரி​யானா போன்ற மாநிலங்​களில் ஏராள​மான வாக்​காளர்​கள் போலி​யாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். ஏராள​மான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி குற்​றம் சாட்டி வரு​கிறார். மேலும், பாஜக​வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்​து, பல்​வேறு முறை​கேடு​களில் ஈடு​படு​கிறது என்​றும் ராகுல் குற்​றம் சாட்​டி​னார். இதற்கு தேர்​தல் ஆணை​ய​மும் பதில் அளித்​துள்​ளது.

இந்​நிலை​யில், தேர்​தல் ஆணை​யத்​தின் மீது ராகுல் காந்தி மீண்​டும் குற்​றம்​சாட்டி உள்​ளார். இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்கு திருட்டு என்​பது ஒரு​வருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்​படை நோக்​கத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதலாகும். தெளி​வான வாக்​காளர் பட்​டியல் என்​பது​தான், நேர்​மை​யான சுதந்​திர​மான தேர்​தலை உறுதி செய்​யும். தேர்​தல் ஆணை​யத்​திடம் நாங்​கள் வைக்​கும் கோரிக்கை எல்​லாம் தெளி​வாக உள்​ளது. தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படை​யாக செயல்பட வேண்​டும்.

மின்​னணு வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். அப்​போது​தான் நாட்டு மக்​களும் அரசி​யல் கட்​சிகளும் அதை ஆய்வு செய்ய முடி​யும். எங்​களு​டைய இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி பிரச்​சா​ரம் தொடங்​கு​கிறோம். அதற்​காக ‘http://votechori.in/ecdemand’ என்ற புதிய இணை​யதளத்தை தொடங்கி வைக்​கிறோம். அத்​துடன் 96500 03420 என்ற செல்​போன் எண்​ணை​யும் வெளி​யிடு​கிறோம். இணை​யதளத்​தில்பொது​மக்​கள் தங்​கள் கருத்​துகளைக் கூறி, பிரச்​சா​ரத்​தில் பங்​கேற்க வேண்​டும். செல்​போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்​சா​ரத்​தில் இணை​ய​லாம்.

இந்​தப் போராட்​டம் நமது ஜனநாயகத்தை காப்​பாற்ற வேண்​டும் என்​ப​தற்​காக நடத்​தப்​படு​கிறது. இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​யுள்​ளார். இந்த இணைய பக்​கத்​தில் பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்​போன் எண், மின்​னஞ்​சல் முகவரி, மாநிலம் மற்​றும் தொகுதி உள்​ளிட்ட தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இதற்​கிடை​யில், பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் கவுரவ் பாட்​டியா கூறும்​போது, ‘‘தேர்​தலில் தோல்வி அடைந்த காங்​கிரஸ் கட்​சி, ஆதா​ரங்​களை வெளி​யி​டா​மல் தேர்​தல் ஆணை​யத்​தின்​ மீது புகார்​ கூறுகிறது’’ என்​று கண்​டனம்​ தெரிவித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.