டிரினிடாட்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. இந்நிலையில், பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி டிரினிடாடில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் 37 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ஹசன் நவாஸ் 36 ரன்னும், ஹுசைன் தலாத் 31 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து மழை காரணமாக ஆட்டம் பாதிப்பு அடைந்தது. வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீலஸ் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவரில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறஙகியது.
முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து தத்தளித்தது.6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி இணைந்து பொறுப்புடன் விளையாடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரோஸ்டன் சேஸ் 49 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 33.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.