காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு மீது பதில் அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரும் மனு மீது மத்​திய அரசு பதில் அளிக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் நேற்று உத்​தர​விட்​டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்கு சிறப்பு அந்​தஸ்து வழங்க வகை செய்​யும், அரசி​யல் சாசனத்​தின் 370-வது சட்​டப் பிரிவை மத்​திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​தது. இதையடுத்​து,அம்​மாநிலம் ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன.

மத்​திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரி கல்​வி​யாளர் ஜாஹூர் அகமது பட் மற்​றும் சமூக அரசி​யல் ஆர்​வலர் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மற்​றும் நீதிபதி கே.​வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கோபல் சங்​கர​நா​ராயணன், இந்த மனுவை விரை​வாக விசா​ரிக்க வேண்​டும் என கோரிக்கை வைத்​தார். மத்​திய அரசு சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா, “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்​தஸ்து வழங்​கு​வது குறித்து மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது” என்​றார்.

இதையடுத்​து, இந்த மனு மீது விரி​வான பதில் மனுவை தாக்​கல் செய்​யு​மாறு மத்​திய அரசுக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். மேலும் இந்த வழக்​கின் மீதான வி​சாரணையை 8 வாரங்​களுக்​கு தள்​ளி வைத்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.