ரோஹித் சர்மா இந்த தொடருடன் ஓய்வு பெறலாம்… ஓபனிங் ஸ்பாட்டுக்கு மோதும் 3 வீரர்கள்!

Rohit Sharma, India National Cricket Team: 1983 உலகக் கோப்பை, 2002 சாம்பியன்ஸ் டிராபி, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 7 முறை இந்திய அணி இதுவரை பலமுறை ஐசிசி கோப்பைகளை வென்றிருக்கிறது.

Rohit Sharma: நீங்காத இடத்தை பிடித்த ரோஹித் சர்மா

இதில் கடைசி இரண்டு கோப்பைகளை இந்தியா ரோஹித் சர்மாவின் தலைமையில் வென்றது அனைவருக்கும் நினைவிருக்கும். இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் சர்மா நீங்காத இடத்தையும் பிடித்திருக்கிறார். 

வொயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணியை பொறுத்தவரை தனிகரற்ற வீரராக ரோஹித் சர்மா விளங்கி உள்ளார். 2007ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர் இன்னும் இரண்டு வருடங்களில் இந்திய அணியில் 20 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார். 4 ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றிருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டைச் சதங்களை அடித்திருக்கிறார். இதன்மூலம் உலகளவில் அதிரடி ஓபனிங் பேட்டர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார்.

Rohit Sharma: ஒருநாள் போட்டியில் மட்டும்…

தற்போது ரோஹித் சர்மா டி20ஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாட உள்ளார், தற்போதைய இந்திய ஓடிஐ அணி கேப்டனும் இவர்தான். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இருப்பினும் இவரை கடந்த 2024ஆம் ஆண்டில் கேப்டன்ஸி பதவியில் இருந்து நீக்கியது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் வெறும் பேட்டராக மட்டுமே ரோஹித் சர்மா நீடிக்கிறார். 

Rohit Sharma: 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவாரா?

இந்தச் சூழலில், ரோஹித் சர்மா வரும் 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை அன்று விளையாடுவாரா கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கிடையில், இன்னும் 24 ஓடிஐ போட்டிகளை இந்திய அணி விளையாட உள்ள நிலையில், அதில் அனைத்திலும் ரோஹித் சர்மா விளையாடுவாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இதற்கிடையில் அவர் விஜய் ஹசாரே தொடரில் விளையாடினால்தான் தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ நிபந்தனை விதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

Rohit Sharma: ‘ரோஹித் சர்மா தினமும் ஓட வேண்டும்’

ஆனால், சர்வதேச அளவில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் ரோஹித் சர்மா இருக்கிறாரா என்ற கேள்வி பலருக்கும் முதலில் எழுகிறது. தற்போது ரோஹித் சர்மாவுக்கு வயது 38. ஒருவேளை அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடினால் அப்போது அவருக்கு வயது 40 ஆக இருக்கும். 40 வயதில் அவர் இதே அதிரடியுடன் விளையாடுவாரா என்பதும் கேள்விக்குறிதான். 

இந்தச் சூழலில், ரோஹித் சர்மா அவரது 45 வயதை வரை விளையாடுவதற்கு இந்த விஷயங்களை செய்தால் போதும் என யுவராஜ் சிங்கின் தந்தையும், பிரபல கிரிக்கெட் பயிற்சியாளருமான யோகராஜ் சிங் ஐடியா ஒன்றை சில நாள்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்ததார். அதுவும் வைரலாகியிருந்தது. அதாவது, ரோஹித் சர்மா 45 வயது வரை விளையாடும் வேண்டுமானால், 4 பேரை வைத்துக்கொண்டு தினமும் 10 கி.மீ., ஓடினாலே போதும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், ரோஹித் சர்மாவின் ஆட்டம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு தேவைப்படுகிறது என்றும் யோக்ராஜ் சிங் பேசியிருந்தார்.

Rohit Sharma: ஓபனிங் ஸ்பாட்டுக்கு கடும் போட்டி

ஆனால், அது தேவையில்லை என்பதே கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது. ஏற்கெனவே தற்போது சஞ்சு சாம்சன், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் என ஒருநாள் அணியிலும் ஓபனிங் இடத்திற்கு அதிக போட்டி இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். 

Rohit Sharma: இந்த தொடரோடு ரோஹித் ஓய்வு பெறலாம்

எனவே, ரோஹித் சர்மா வரும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தோடு விடைப்பெற்றுக்கொள்வது நல்லது என ரசிகர்கள் கருதுகின்றனர். வரும் அக்டோபர் மாதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று மூன்று ஓடிஐ மற்றும் ஐந்து டி20 போட்டிகளை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு Farewell போட்டிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.